புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2016

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் அரை சொகுசு பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்து ள்ளது.

போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைகளை மீறி அரைசொகுசு பேருந்துகளில் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்ப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளில் பயணிக்கும் மேலதிக பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய, அந்த பேருந்துகளி் சாரதிக்கும் நடத்துனருக்கும் தற்காலிக தடை விதிக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா ஒரு பயணிக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் சாரதிகளுக்கும் நடத்துனர்களும் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பயிற்சி பாசறைக்கும் அவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் எம்.பி.ஏ.ஹேமசந்திர கூறியுள்ளார்.

இதனைத் தவிர, மேலதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் அடிப்படையில் தலா 100 ரூபா என்ற வீதத்தில் பஸ் உரிமையாளரிடமும் அபராதம் அறவிடப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்

ad

ad