புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2016

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி



தனது பேச்சை எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே நான் இறந்துவிட்டதாக கூறி வதந்திளை மீண்டும் பரப்பிவிட்டுள்ளனர் என கூறியுள்ளார் திண்டுக்கல் லியோனி. 

நகைச்சுவை பட்டிமன்றங்களில் கொடி கட்டிப் பறந்த திண்டுக்கல் லியோனி, திமுகவில் இணைந்த பிறகு அரசியல் மேடைகளில் பேசி கலக்கி வருகிறார். அரசியல் மேடைகளில் ஏறிய பிறகு அவர் இறந்துவிட்டதாக மூன்று முறை வதந்திகள் பரவின. அந்த வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். இதேபோல் நேற்றும் (சனிக்கிழமை) விபத்தில் காலமானதாக பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. 

இது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு விளக்கம் அளித்த அவர், 

நேற்று (சனிக்கிழமை) சமூக வலைதளங்களில் புதுக்கோட்டை சாலை விபத்தில் நான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. அதனை பார்த்துவிட்டு எனது ரசிகர்கள் கிட்டதட்ட 500 பேருக்கு மேல் என்னை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் விசாரித்தார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி. நான் நலமுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

ஏற்கனவே 3 முறை இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டது. பலமுறை விளக்கம் கொடுத்தேன். ஒருமுறை 10 நாள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசியல் கூட்டங்களில் பேசுவதினால், என்னுடைய பேச்சை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற ஒரு கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கருத்து சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் பெரிய பங்கமாக இருக்கிறது. இதுபோன்றவை இனி தொடரக் கூடாது என்பதுதான் என்னைப்போன்ற மேடைப்பேச்சாளர்களின் விருப்பம். மக்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்றார்

ad

ad