புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2016

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி
லுள்ள காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் காணாமல் போனோர் தினத்தன்று அமைதியான முறையில் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.
இந்த கண்டனப்பேரணியானது எதிர்வரும் 30 ஆம் திகதி உரிமைகள் மற்றும் மக்களின் சுயகௌரவத்திற்கான நிலையம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது
பேரணியின் முடிவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 30 ஆம் திகதியை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு தமிழ் சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மாத்திரம் ஆயிரத்து 300 இற்கும் அதிகமானவர்கள் காணமல்போயுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான அமையம் தெரிவித்துள்ளது.

ad

ad