புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2016

வலிவடக்கில் 1000ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது இராணுவம்

வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளதுடன், தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணி களை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தமுடியும்.

மோதல்களுக்கு முன்னர் மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை,காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிக ளையே இராணுவம் விடுவிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 2000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad