புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 செப்., 2016

சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிகமாக நீக்கம்: தெ.நடிகர் சங்கம் செயற்குழுவில் தீர்மானம்


நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கம் செய்து தென்னிந்திய நடிகர் சங்கம் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிதியில் இருந்த ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடபுரத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை முறைகேடாக விற்றது தொடர்பாக அப்போதைய சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி, பொருளாளராக இருந்த கே.என்.காளை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் பதிலின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.