புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2016

3225 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்


கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் காலை 10 மணிக்கு இடம்பெறும்.
இவர்களது நியமனம் அந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருமென்றும் கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர் ஐ.எம்.கே.பி.இங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் இவர்கள் சேவையில் அமர்த்தப்படுவார்கள். பின்தங்கிய பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும். 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கு கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இம்மாதம் 30ஆம் திகதி வரையில் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ad

ad