புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2016

ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது!

இந்திய – இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் அநாதரவாக இருந்த நிலையில் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர் ஒருவர் இந்திய பாதுகாப்புத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  

 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அருள் ஜெயரத்தினம் என்பவர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடல் வழியாக சென்றவேளையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
                                                                        
தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் பல மணி நேரமாக நிற்பதாக கடலோரக் காவல்படையினருக்கு மீனவர்கள தகவல் கொடுத்த நிலையில் நேற்று பிற்பகல் அங்கு சென்ற கடலோரகாவல்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்..

பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்றபோது கரையோர பொலிஸாரும்  மண்டபம் பொலிஸாரும் குறித்த அகதியை பொறுப்பேற்க மறுத்த நிலையில் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின் ஒருவழியாக கரையோர பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் விசாரணையில்   குறித்த நபர் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். 

20 வயது முதல் 40 வயது வரையிலான உடல் திடமான தமிழர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டு கொலை செய்வதாக தகவல் கிடைத்ததால் உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி  தான் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடி வரும் வழியில் பாதியிலேயே மணல்திட்டில் இறக்கிவிட்டுச் சென்று விட்டதாக குறித்த நபர் தெரிவித்ததாகவும் கரையோர பொலிசார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபரிடம் இருந்து  ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத் தாள் ஒன்றும், அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்  மண்டபம் அகதி முகாமில் குறித்த நபரின் சகோதரி இருப்பதாகவும் கூறினர்

ad

ad