புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2016

நோயாளிக்கு உணவை தரையில் போட்ட பணியாளர்கள்: எங்கே போனது மனிதாபிமானம்?


ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு உணவை தட்டில் வழங்காமல் தரையில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் தேவி என்பவர் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் உணவு உண்பதற்கு தட்டு இல்லாத காரணத்தினால் தட்டு தருமாறு மருத்துவமனையினரிடம் கூறியுள்ளார். தட்டு தரப்படாததோடு, மனிதாபிமானம் இல்லாமல் தரையில் உணவை போட்டுள்ளனர். கையில் கட்டுடன் தரையில் போட்ட உணவை தேவி சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad