புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2016

இராணுவம் , பொலிஸ் சுழ்ந்துள்ள நிலையில் வடக்கில் போதைப்போருள் வருவதெப்படி - முதலமைச்சர் கேள்வி

யாழ் நகரை சுழ அதிகளவு இராணுவத்தினர் உள்ள நிலையில், ஏராளமான பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு இருக்கையில் வடமாகாணத்திற்குள் குறிப்பாக யாழ்ப்பாணம் இவ்வளவு தொகை கஞ்சா எப்படி வருகின்றது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று யாழ் முற்றவெளியில் வெற்றிகரமாக நடந்தேறிய எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பல கேள்விகள் முதலமைச்சரால் எழுப்பப்பட்டது. 

இதன்போது போதைவஸ்து தொடர்பாக முதல்வர் கருத்துதெரிவிக்கும் போது,

வடக்கு முழுவதும் இன்று வரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. முப்படையினரும் யாழ்ப்பாணத்தில் குடிகொண்டுள்ளனர் . இவற்றை விட பொலிஸார் வேறு உள்ளனர். இருப்பினும் வடபகுதிக்குள் தினமும் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் எப்படி வருகின்றது ? எமது இனத்தையும் எமது இளைஞர் சமுதாயத்தையும் சீரழிப்பதற்கான முயற்சிகளா? எனவும் முதலமைசச்ர் கேள்வியெழு்ப்பியுள்ளார்

ad

ad