புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2016

தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நாளை (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில்
ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொடருந்து புறப்படுகின்றது.
Gare de Lyon இல் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்துகள், மீண்டும் இரவு 19.42 மணிக்கு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 10.49 மணிக்கு Gare de Lyon வந்தடையவுள்ளது.
இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ விரைந்து தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
நாளை சில சுநுசு தொடருந்துகள் தமது சேவையை மட்டுப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கும் காரணத்தால் உங்கள் பயணத் தாமதத்தைத் தவிர்த்துக்கொள்வதற்கு முன்னதாகவே Gare de Lyon வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.

ad

ad