புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2016

இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

ஒரு நபருக்கு கடவுச்சீட்டு என்பது அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது.

இத்தகைய கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பலருக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பெற்றுக்கொள்வது, எப்படிப் பெறலாம், செல்லுபடியாகும் காலம், கடவுச்சீட்டின் வகைகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விடயங்கள் பற்றிய தெளிவு அவசியம்.
அதற்கான விளக்கமே இது
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
டிஜிட்டல் புகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமர்ப்பிக்கலாம்.
அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.
முக்கிய விடயங்கள்
எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயது பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் K 35A இனை சமர்ப்பித்தல் வேண்டும்.
குழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.
16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள 3 பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது விரலடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம்.
பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.
60 வயதிற்கு குறைந்த வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு அவசர சான்றிதழ்கள் (EC) வழங்கப்படமாட்டாது.
டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்?
advertisement
தங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள்.
புகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர்.
அச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை.
புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329120 / 0115329123 ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலமாகவோ இலங்கைப் பிரஜையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல்
உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை
தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.
அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம்.
கடமை நேரங்கள் யாவை?
சாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் - கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்பது எப்படி?
சுஹூருபாய, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் அனைத்து விதமான கடவுச்சீட்டு விண்ணப்ப பத்திரங்களையும் ஒப்படைக்கலாம்.
கடவுச்சீட்டு வகைகள் யாவை?
அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு
சாதாரண கடவுச்சீட்டு
இராஜதந்திர கடவுச்சீட்டு
உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு
ஆசியாவினதும் மத்திய கிழக்கினதும் குறித்துரைத்த நாடுகளுக்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது.

ad

ad