புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 செப்., 2016

பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்

thangavel
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி
ச் செல்கிறார் தமிழக வீரர் மாரியப்பன்.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து வரும் 18}ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கெüரவம் மாரியப்பனுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாரியப்பன் 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.