புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2016

டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி


இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
பெற்றுக்கொள்ளும் காணிகளில் கிளிரிசிடியா எனப்படும் சீமைக்கிழுவையை பயிரிடப்பட்டு பின் அறுவடையாக ஒவ்வொரு ஆண்டும் வெட்டியெடுக்கப்படுகின்ற தடிகள் டோக்கியோ சீமேந்துக் கம்பனிக்கு நேரடியாக விற்கப்படும். இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதியஒளி ஒரு கிலோ சீமைகிழுவைத்தடிக்கு 4 ரூபா 25 சதத்தை வருமானமாகப் பெற்றுக்கொள்ளும்.
இத்திட்டத்தின் கீழ் புங்குடுதீவில் வாழும் சகல மக்களுக்கும் வழிகாட்டி அவர்தம் வாழ்விலும் பொருளாதார வளத்தை உயர்த்தவும் புங்கையின் புதிய ஒளி முன்னின்று உழைக்கும்.
இது சம்பந்தமாக புங்குடுதீவின் சகல பாடசாலைகளினூடாக மாணவர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கை ஒழுங்கு செய்து டோக்கியோ சீமேந்துக் கம்பனியில் இருந்து வருகை தந்திருந்த திட்டப்பணிப்பாளர்களின் உதவியுடன் சிறப்பான முறையில் புங்கையின் புதிய புதிய ஒளியினால் விளக்கமளிக்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கமும் , நன்மைகளும்.
**************************************
நோக்கம்
*********
புங்கையின் புதிய ஓளி தனது ஆரம்பகால அறிக்கையில் தெட்டத்தெளிவாக குறிப்பிட்ட படி, புலம்பெயர் புங்குடுதீவு மக்களுக்கு பொருளாதார ரீதியாக பாரமாக இருக்காமல் தம் சொந்தக்காலில் நிமிர்ந்து நின்று மாணவர் சமுதாயத்திற்கு இடையறா, தடையில்லா சேவையை வழங்குதல்.
நன்மைகள்.
************
சீமைக் கிழுவையை பாரிய அளவில் பயிரிடுவதன் மூலம்
* நிரந்தரமாக நிலத்தை புனர் நிர்மானம் செய்யக்கூடியமை.
*சீரற்ற கால நிலை மற்றும் பிரதேச நிலைக்கு ஏற்ப நிலைத்தகு தன்மை.
*வேகமாக வளர்ச்சி பெறுகின்றமை.
*அடிக்கடி வெட்டப்படுவதாயினும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டிருக்கின்றமை.
*மண் மண்டலத்தில் நைட்ரஜனை உருவாக்குவதால் மண் பசளைத்தன்மையாக மாறுகின்றமை.
*கால் நடை வளர்ப்பின் போது புரதம் அதிகம் கொண்ட விலங்கு உணவாக பயன்படுகின்றமை.
*சீமைக்கிழுவையை உணவாகக் கொடுப்பதனால் பால் உற்பத்தி அதிகரித்துக் கொள்கின்றமை.
*ஏனைய பயிர்களுக்கு பசளையாக பயன்படுகின்றமை.
*கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிகின்றமை.

ad

ad