புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2016

தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

வட மாகாண  கல்வி  அமைச்சின் கீழ் தீவக வலய  பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்  குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தீவக வலயத்திலுள்ள நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு மகா வித்தியாலயங்களுக்கும், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி மற்றும் நயினாதீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றின் வகுப்பறைக் கட்டிடங்கள் புனரமைப்பிற்காக தலா 11 மில்லியன் வீதம் சுமார் 55 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனலைதீவு வடலூர் அ.த.க பாடசாலைக்கு இரு மாடி ஆரம்பக் கற்றல் வளநிலையம் நிர்மாணித்தலுக்கென 18 மில்லியன் ரூபாயும்,  புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கனிஷ்ட இடைநிலை ஆய்வு கூடம் அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாயும், கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயத்தில் தொழில்நுட்ப பாடக் கட்டடம் அமைப்பதற்கென ரூபா 20 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் 5 மில்லியன் ரூபா செலவில் அதிபர் விடுதியும் புங்குடுதீவு மகா வித்தியாலயம் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மற்றும் வேலணை மத்திய கல்லூரியில் தலா 7 மில்லியன் ரூபா செலவில் ஆசிரியர் விடுதிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad