புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.

இதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.

எனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

ad

ad