புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

லண்டனில் இலங்கை தூதுவர் முன்னிலையிலே முழங்கிய முதல்வர்

வடமாகாணத்தில் 150,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்க ளின் சுமுகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர்  சி. வி. விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்

லண்டன் கிங்ஸ்ரன் நகர சபையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிங்ஸ்ரன் மாநகரு க்கிடையிலான ‘இரட்டை நகர’ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குற்றம் சாட்டியதுடன் பொதுமக்களின் குடியிருப்புக்கள், நிலங்கள், வர்த்தக மையங்களில் ராணுவம் குடிகொண்டிருப்பதனால் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதுடன் அங்கு வாழும் விதவைகள் மற்றும் ஏனையவர்களின் நல்வாழ்வு அச்சுறுத்தல் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ‘இரட்டை நகர’ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பிரித்தானியாவுக்கான இல ங்கை தூதுவர் அமாரி விஜயவர்தன, கிங்ஸ்ரன் நகர சபை கவுன்சிலர்கள் உட்பட பிரித்தா னிய வாழ் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டம், தேசிய பாதுகாப்பு என்பன மக்களுக்கு நீதி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதாகவும் இதனால் ஒன்றிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் நிர்வாகமானது மனிதநேய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சிந்தனை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் அனைத்து விடயங்களிலும் வட மாகாண சபை மத்திய அரசாங்கத்தினால் புறக்க ணிக்கப்படுவதாகவும் திட்டங்கள் யாவும் மத்திய அரசால் முடிவுசெய்யப்பட்டு மாகாண சபை மீது திணிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குறித்த இந்த இரட்டை நகர உடன்படிக்கை மூலம் பல்வேறு திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சி. வி. விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

ad

ad