புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2016

அதிபர் நியமனம் தாமதமடைய மத்திய கல்வியமைச்சே பொறுப்பு -வடமாகாண கல்விப் பணிப்பாளர் குற்றச்சாட்டு

புதிய அதிபர்களுக்கான நியமனம் தாமதிக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடைய அறிவுறுத்தல்கள் காரணமாகவே அதிபர்களின் நியமனங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

நேற்றையதினம்  யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற தமிழர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் 

புதிய அதிபர்களின்  நியமனங்களை  நிறுத்துமாறு மத்திய கல்வியமைச்சிடமிருந்து  அறிவுறுத்தல் வராது இருந்திருந்தால் சகலரும் ஒரே திகதியில் ஏதோ ஒரு பாடசாலையில் கடமை பொறுப்பேற்று இருப்பீர்கள். புதிய  அதிபர்களின்  நியமனம் தடைப்பட்டதற்கு யார் காரணம்  என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். 

எங்களுடைய கூட்டத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்து  உரிய நியமனங்களை ஒரே திகதியில் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தோம்.மேலும் அதிபர்கள் வலிகாமம் வலயத்தில் நடைபெற்ற பிரச்சினைகளை எமக்கு கூறியிருந்தார்கள்.வலிகாமம் வலயத்தில் பதில் அதிபர்கள், உதவி அதிபர்களுக்கான நியமனங்களை கோரியிருந்தார்கள் அதற்கு கூட போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த அதிபர்கள்கூட விண்ணப்பித்திருந்தனர்.

அந்தவகையில் தெரிவுசெய்யப்பட்ட அத்தனை அதிபர்களுக்குமான நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு வலிகாமம் வலயத்தில் இருந்தது. ஆனால் ஒரு ஆசிரியர் தொழிற்சங்கம் தலையிட்டு பிரதி அதிபர், உதவி அதிபர்களுக்கான விண்ணப்பம் கோர வேண்டாம் என  கேட்டுக் கொண்டதற்கிணங்க அது நிறுத்தப்பட்டது.

எனவே  வலிகாமம் வலயத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தால் உங்கள் அனைவருக்கும் ஒரே திகதியில் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றிருக்கும் எனவும் அவர் மேலும்   தெரிவித்தார்.

ad

ad