மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் சிவகீதா பிரபாகரனால் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, சிவகீதா பிரபாகரன், அவரது கணவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.