புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2016

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22-ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்ற பெண் அதிர்ச்சி தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் தொடர்ந்து பரவியதால் இதற்கு காரணமான 8 பேரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், பிரான்ஸில் உள்ள தமிழச்சி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய பிரமுகர் ஒருவர் பிரான்ஸ் தூதரகம் மூலம் புகார் கொடுத்ததாகவும், இப்புகாரை தொடர்ந்து பிரான்ஸில் தமிழச்சி அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி வதந்தி பரப்புபவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் எனவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad