புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2016

சுகவீனத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்?

பாடசாலைக்கு சுகவீனம் காரணமாக ஒரு வாரம் சமூகமளிக்காத ஒன்பது வயது மாணவனை வகுப்பாசிரியர் துன்புறுத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரபல மகளிர் பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனை கடந்த 17 ஆம் திகதி காதில் திருகி கன்னத்தில் அறைந்து வகுப்புக்கு வெளியில் நிற்க வைத்து துன்புறுத்தியதாக  தெரிவிக்கப்படுகிறது

மானிப்பாய் பகுதியில் வசிக்கும் தரம் நான்கில் பயிலும் குறித்த சிறுவன், கடந்த ஒரு வாரமாக தொண்டையில் ஏற்பட்ட அழற்சி, கடும் இருமல் மற்றும்  உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும் காது வலி ஏற்பட்டு காது மூக்கு தொண்டை நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்து ள்ளார்.  

இதனால் ஒரு வாரமாக பாடசாலை செல்லவில்லை எனவும் குறித்த மாணவன் முழுமை யாக குணமடையாத போதும் கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைக்கு ஒரு வாரம் வராமைக்காக பெற்றோரால் கடிதமும் மாணவனிடம் கொடுத்த னுப்பப்பட்டது. 

எனினும் வகுப்பாசிரியர் மாணவனை கடுமையாக பேசியும் காது, கன்னம் ஆகிய உறுப்புக ளில் தாக்கியதுடன், வகுப்புக்கு வெளியிலும் நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவன் குறித்த தாக்குதலால் இரவு முழுவதும் மீண்டும் காது வலியால் அவதிப்பட்டதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

அத்துடன், சிறுவன் உள ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.   

சம்பவம் தொடர்பில் மாணவனின் தாயார் மறு நாள் பாடசாலை சென்று குறித்த ஆசிரியரு டன் பிரஸ்தாபித்த போது, கல்வியியற் கல்லூரியின் பயிற்றப்பட்ட குறித்த வகுப்பாசிரியை தனது செயலை நியாயபடுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாயார் பாடசாலை அதிபருடன் முறையிடட போதும் அவரும் ஆசிரியரின் செயலை நியா யப்படுத்தியுள்ளார். 

இதனால் வேறு வழியின்றி பெற்றோர் சண்டிலிப்பாய் பிரதேச நன்நடத்தை உத்தியோகத்த ரிடமும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய ஆணைக்குழுவிடமும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இதுதொடர்பில் விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. 

ad

ad