புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 அக்., 2016

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடிஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடி!


உடல் நலம் குறைவு காரணமாக செப்டம்ப
ர் 22ம் தேதி இரவு சென்னையில் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா.

தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், தமிழக அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் அப்போல்லோ மருத்துவ மணிக்கு சென்று ஜெ.வின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்கள்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை விமான படையின் விமானம் மூலம் சென்னை வருகிறார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மற்றும் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மொத அமைச்சர்கள் பிரதமரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சென்னை அப்போல்லோ மருத்துவ மனைக்கு அழைத்து செல்கின்றனர்.

அப்போல்லோ மருத்துவ மணியில் ஜெ.வின் உடல்நலம் குறித்து விசாரித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் டெல்லி திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!

ஜெ. ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆப்பிள் சாப்பிடுகிறார் என ஊடகங்களில் சசிகலாவை சார்ந்தவர்கள் செய்திகளை வரவைக்கிறார்கள். இந்த பாசிட்டிவ் பிரச்சார விஷயத்தில் ஹைலைட்டாக பிரதமரின் வருகையை மாற்ற சசிகலா திட்டமிட்டிருப்பதாக போ