காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில்
ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு கைது
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினரை போலீசார் கைது செய்தனர்.