புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2016

ஓ பன்னேர்செல்வம் பொறுப்பு முதலவரா /மிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏ

மிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்து
வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதல்வர் உடல்நிலை சீராக இன்னும் சில நாட்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அதுவரை மருத்துவமனையிலே அவர் இருக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கபட்டது.

 முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் இரண்டு தினங்களுக்கு முன் அப்போலோ வருகை தந்தனர். அவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு செய்தனர். அந்த தகவலை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில் வந்திருப்பதால், மத்திய அரசிற்கு முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை அனுப்பியுள்ளார்கள். இது மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளதாம்.
 
ஒரு மாநிலத்தின் முதல்வர் செயல்படாத நிலையில் இருந்தால், அந்த மாநிலத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வராக ஒருவர் இருந்து செயல்படுத்த வேண்டும்.ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக,அப்போலோ மருத்துவமனை தான் தலைமை செயலகம் போல செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம், முதல்வர் பெயரில் அறிக்கைகள் கூட வெளியாகியின. முதல்வர் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும், நிர்வாகத்தை அவர் கவனித்து வருகிறார் என்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவ குழு  வந்த பிறகு முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை தகவல்கள் கசியத் துவங்கியுள்ளது. முதல்வரால் இப்போது செயல்பட முடியாத நிலை இருக்கும் போது, தமிழகத்தின் நிர்வாக செயல்பாடுகளை யார் கவனித்து கொள்கிறார்கள் என்று மத்திய அரசிற்கு பதில் சொல்ல  வேண்டி பொறுப்பு, கவர்னருக்கு உள்ளது. இததை தொடர்ந்து தான், தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், கவர்னர் மாளிகையில் கவர்னரை சந்தித்துள்ளார்.
பா.ஜ.க மூத்ததலைவர் சுப்பிரமணியசுவாமி தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்கள். தமிழகத்தின் முதல்வர் குறித்த உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் ” என்று அறிக்கை விட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் தமிழக கவர்னரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளார்.இந்த விவகாரங்களை தொடர்ந்து தமிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டவிதிகளின் படியும், இந்த நிலை ஏற்பட்டு இருப்பதால்,தலைமைச் செயலாளர் இதுகுறித்து கவர்னருடன் ஆலோசனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கவர்னர் வித்தியாசாகர் மீண்டும் அப்போலோ மருத்துமனைக்கு வருகை தர உள்ளதாகவும், அப்போது இது குறித்து முழுமையான முடிவு எட்டப்பட உள்ளதாக தெரிகிறது.

இவர்கள் முடிவுக்கு பின் தான் ஜெயலலிதாவை சந்திக்க மோடி வருவார் என்கிறார்கள். ராகுல் காந்தி வருகையை பா.ஜ.கவே எதிர்பார்க்க வில்லை என்பதால், இப்போது மோடி வரவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அவர் வரும் போது, எந்த சட்ட சிக்கலும் இருக்க கூடாது என்று தான், இந்த பொறுப்பு முதல்வர் குறித்த பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ளதாம்.
இதனிடையே இன்று மாலை தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கவர்னரை சந்தித்துப்பேசினர். ஒரு மணிநேர சந்திப்புக்குப்பின் இவர்களில் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க கவர்னர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில மணித்துளிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ad

ad