புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 பிப்., 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி சபை தொகுதிகளை வரையறுக்கும் எல்லை நிர்ணய அறிக்கை நாளைய தினம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்