புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2017

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் படுகொலை

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி
வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது குடியிருப்பு பகுதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பெண் தொடர்பில் பொலிஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டி உதவிகோரியிருந்த போதிலும், அவர்கள் தாமதமாகவே அந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நைஜீரிய நாட்டு அகதி ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் சோபிகா ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து சேவை செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad