9 மார்., 2017

பிரான்சில் இருந்து நாடு திரும்பிய தந்தை, மகள் கட்டுநாயக்கவில் கைது! - பிணையில் விடுவிப்பு

பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன் குறித்த தந்தையும் மகளும் பிரான்ஸ் சென்றிருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரவில்லை. அதேவேளை, இவர்கள் இருவரும், இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். 10,000 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இரண்டாவது தவணைக்காக 4 ஆம் மாதம் ஆஜராகுமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார்


பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன் குறித்த தந்தையும் மகளும் பிரான்ஸ் சென்றிருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரவில்லை. அதேவேளை, இவர்கள் இருவரும், இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். 10,000 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இரண்டாவது தவணைக்காக 4 ஆம் மாதம் ஆஜராகுமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார்