தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 09.30 மணிக்கு வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் 2 ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது.

இதற்கு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமைகள் பேரவைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளதோடு, மறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மனு தொடர்பில் கூட்டமைப்பினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டமைப்பின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.