2 மார்., 2017

யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்

யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களின் சீ.சீ.ரி கமராவில் அக்ப்பட்டுள்ளார்
.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாடிக்கையாளர் போன்று சென்று நிதி ஏமாற்று மூலம் நூதனத்திருட்டில் ஈடுபடும் கும்பலிடம் பணத்தினைப் பறிகொடுத்த ஓர் வர்த்தகர் இது தொடர்பினில் மேலும் விபர்ம் தெரிவிக்கையில் ,
மிகவும் விலை உயர்ந்த காரில் நான்கு பேர் வருகை தந்தனர் அவ்வாறு வருகை தந்தவர்களில் இருவர் எனது கடைக்குள் வருகை தந்தனர். ஏனைய இருவர் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களிற்கு சென்றனர் . அவ்வாறு வரும்போது அவர்கள் மிகவும் உயர் வர்க்கத்தினர் போன்றே காட்சியளித்தனர்.
அதனால் அவர்கள் மீது எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் என்னிடம் இரண்டாயிரம் ரூபா தாளை வழங்கி 100 ரூபா ரீச் சாச் செய்து கொண்டார் . அதன்பிரகாரம் நான் மிகுதிப் பணம் 1900 ரூபாவினையும் வழங்கினேன். அவ்வாறு வழங்கிய சமயம் உடனடியாகவே மாற்றிய பணம் 100 ரூபா உள்ளது. அதனால் 2000ம் ரூபா தாளை திரும்பத் தாருங்கள் என்றனர். நான் 2 ஆயிரம் ரூபாத் தாளை வழங்கியதும் அவர்கள் வெளியேற முற்பட்ட சமயம் நான் முதல் வழங்கிய 1900ம் ரூபாவும் திரும்பத் தரவில்லை எனக்கோரியபோது அது வழங்கபடவில்லை என்றே மறுத்துவிட்டனர்.
அவ்வாறு பணம் வழங்கியதா இல்லையா என்பது தொடர்பில் கமராவினில் பரீட்சிப்போம் எனக் கோரியபோது அவர்கள் வெளியேறி காரில் சென்று விட்டனர். அப்போது அவ்வாறு பணத்தினை வழங்கினேனா அல்லது வழங்கவில்லையா ? என்பது தொடர்பில்கூட என்னால் உடனடியாக முடிவிற்கு வர முடியாத அளவிற்கு குழம்பி விட்டேன். அதன் பின்பு வர்த்தக நிலையத்தில் இருந்த வியாபாரப் பணத்தினை எண்ணியே நான் பணம் இழந்தமை உறுதியானது. என்றார்.