8 மார்., 2017

காங்கேசன்துறைப் பகுதியில் படையினர் வசம் உள்ள நிலங்கள் ஒப்படைக்கப்படும் -வேதநாயகன்

காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் நிலம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கில் ஒப்படைக்கப்படும் என  பாதுகாப்பு அமைச்சி
ன் பதில்  செயராளர் நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
காங்கேசன்துறையில் கடற்கரையோரமாக படையினர் வசமுள்ள நிலங்களில் மேலும் 29 ஏக்கர் நிலம் எதிர் வரும் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்பாக ஒப்படைக்கப்படும் . இவ்வாறு ஒப்படைக்கப்படும் நிலங்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே குறித்த நிலங கள் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இவ்வாறு விடுவிக்கப்படும் நிலங்கள் காங்கேசன்துறை தல்செவன உள்ளாச விடுதிக்கும் ஊறணியில் விடப்பட்ட   தற்காலிக இறங்குதுறைப் பிரதேசத்திற்கு கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் பிரதான வீதிக்கும் கடல்கரைக்கும் இடையிலேயே குறித்த 29 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குவாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றார்.
இவ்வாறு எல்லையிடப்பட்டபிரதேசத்தினை விடுவித்தாலே குறிப்பிட்ட பி்தேசத்தினில் 250 மீனவக்குடும்பங்கள் வாழ முடியும் என வலி வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தினர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவின் ஊடாக தெரிவித்து குறிப்பிட்ட பகுதிகளையும் விடுவிக்கமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது