துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு உடற்கூறாய்வு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.
அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்பதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று எம்பாமிங் செய்யப்பட்டு அவரது உடல் போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் தனிவிமானம் மூலம் இன்று இரவு மும்பை கொண்டுவரப்படுகிறது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதையடுத்து நாளை காலை 6 மணிக்கு அந்தேரியில் உள்ள ரிகிரியேஷன் கிளப்புக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அவரது உடல் 11 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லே பார்லே மைதானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்படும். 12 மணிக்குள் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும்.