புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு ; போராளி செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான்
எமது மக்களுக்கான விடிவு எங்கிருந்தும் வரும் என விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி செழியன் தெரிவித்தார்.
சங்கானை நிற்சாமம் பகுதியில் இடம்பெற்ற உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வறு தெரிவித்தார். தனதுரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பது என்பதும் அவர்கள் சார்ந்த அந்த தேர்தல்களை வளர்ச்சிப் போக்கில் கொண்டு போவதென்பதும் தமிழருடைய அடிப்படை ஞானம். அதிலிருந்து நாம், வீடுபட முடியாது.
இந்தத் தேசத்தில் எமது மண்ணை ஏறிமிதித்து வசப்படுத்தி ஏதோவெல்லாம் செய்தபோதுதான் ஆயுதப்புரட்சி ஏற்பட்டது. அதற்கு முற்பாடு பெருவெற்றிபெற்ற கட்சிதான் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று கூறப்படும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
எமது உரிமை, இறைமை எப்படித் தட்டிப்பறிக்கப்பட்டதென்பது உங்களுக்குத் தெரியவேண்டும். இந்தத் தேசத்தில் அரசியல் ரீதியாக எமது மக்கள் தமது உரிமைகளைக் கேட்டபோது அது வஞ்சிக்கப்பட்டது. அதன்காரணமாக எழுந்ததுதான் விடுதலைப் போராட்டம்.
அதற்கு முற்பாடு இந்த மண்ணில் என்ன நடந்தது என்பது பெரியவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த மண் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டது. எமது மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பது சகலரும் அறிந்த விடயம். அதற்குப் பிற்பாடு மாபெரும் விடுதலைப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதனை உலகம் மூக்கின்மேல் விரலை வைத்துப் பார்த்து வியந்தது அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் எனப்பார்த்தது. எமது இலக்கை நெருங்கிய வேளை உலகமே சேர்ந்து எம்மை நசுக்கியது. சுமார் 20 நாடுகள் சேர்ந்துதான் உங்களுடைய பிள்ளைகளின் போராட்டம் நசுக்கப்பட்டது. இதுதான் நிதர்சனம். அந்தப் போராட்டத்திற்கு முன்பு எமது தலைவர் எடுத்துக் கொண்டதீர்க்க தரிசனமான முடிவுதான் எமது மக்களை அரசியல் ரீதியாக இணைக்க வேண்டும் என்பது. அதில் அவர் வெற்றி கண்டார்.
ஆயுத விடுதலையில் நாம் தோல்வி கண்டோம். அந்த அரசியல் ரீதியான வெற்றிதான் 2004, 2010 இல் இவர்களுக்கு அமோகமான வெற்றி வாய்ப்பை ஈட்டிக்கொடுத்தது. ஆயுத தியாகத் தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள் தற்போது அரசியல் ரீதியாக அகிம்சை, உரிமை, விடுதலை என்கிறார்கள்.
இப்படியும் அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்களோ என்ற தவிப்பு சிலருக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வருவது நியாயம். ஆனால் எமக்கு அது வந்துள்ளது. ஆனால் எமது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்த மகிந்தவுக்கு வீரசிங்கம் மண்டபத்தில் எம்மவர்களே மாலைபோட்டு வரவேற்ற காட்சியைக் கண்டோம். எனவே எமது தாய், தந்தை, உறவுகளை கதறக் கதறக் கொன்றொழித்த அந்த சிங்களக் கட்சிகளையா இங்கு கொண்டு வரப் போகின்றோம்.
இந்தியப் படைவந்தபோதும் எமது தலைவன் தனியாகவே நின்றான். தற்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தனியாகவே நிற்கிறது எங்களை எதிர்த்த இந்தியாவும் இங்கேதான் நிற்கிறது. எங்களுக்குக் குழிபறித்த கருணாவும் கூட்டமைப்பை நோக்கித்தான் கையை நீட்டுகிறார். யாரை எடுத்தாலும் கூட்டமைப்பையே எதிர்க்கிறார்கள். 2கோடி வாங்கியதென்றால் அதனை வாங்கி அவர்கள் பாக்கெற்றுக்குள்ளா வைத்தார்கள்? அது திறைசேரி மூலம் எமது கிராம அபிவிருத்திக்குச்செல்லும்.
இது நாடாளுமன்ற மாகாண சபைத் தேர்தல் அல்ல. இது கிராமத்திற்கான தேர்தல். இந்தத் தேர்தல் வெற்றியை சிங்களவன் பார்க்கிறான். கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள், அவர்களது வெற்றி அவர்கள் நன்றாக இருக்கிறார்களா? என்பதே இன்று இந்த தேசத்தினுள்ள கேள்வி? இந்தக் கேள்விக்குத்தான் நாம் விடைபெற வேண்டும், இந்த விடையைத்தான் இல்லாமல்செய்ய எமது புல்லுருவிகள் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் செய்யட்டும் அதைப்பற்றி எமக்கு அக்கறை இல்லை. ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்.
நாம் இவ்வளவு காலமும் போராடி விழுப்புண் அடைந்த நிலையிலும் இங்கு வந்து பேசுவதென்பது எம்மால் தாங்க முடியாமல்தான். இவர்களிடம் கையூட்டு, நாளாந்த படிபெற்று இங்கு வரவில்லை. நாம் ஏதோ வேலைசெய்கிறோம். ஆனால் தேசியம் என்கின்ற ஆன்மா எமது இதயத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனது துடிப்புத்தான் இன்று உங்கள் முன்னர் எம்மை வரவழைத்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது இந்த மண்ணில் பிரகாசிக்கின்ற போதுதன் மக்களுக்கான விடிவு எங்கிருந்தும் வரும். அதை நீங்கள் இல்னக்செட்தக்அதன் விடிவு வெகுது த்தில் போய்விடும். அது விடிவு வருமோ என்பதுகூடத்தெரியாது எனவேதபவக-மதிப்பகஅன்ப3 கேட்டுக்கொள்கின்றேன்.பெப்ரவரி 10 இல் வீட்டுக்கு புள்ளடியிட்டு கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.

ad

ad