புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2018

ஈழத்தமிழரின் உச்ச உதவிக்குணம் வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி



கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கியுள்ளது

கேரளாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ள நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு ரூ.600 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், உலக நாடுகளில் இருந்தும் நிதியுதவி வருகிறது. இங்கும் பலர் உதவி வருகின்றனர். திரைத்துறையில் இருந்து பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.விஜய், விஜய் சேதுபதி, விக்ரம், கமல்ஹாசன், ரோகிணி, விக்ரம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சூர்யா, கார்த்தி, ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்மூட்டி எனப் பலரும் உதவி உள்ளனர். இந்நிலையில், லைகா புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவியை கேரள முதல் மந்திரி பினராய் விஜயனிடம் வழங்கியுள்ளது

ad

ad