இது ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக அரசுகள் தான் காரணம் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு கட்சிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டிக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று 32 மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.