புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2018

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பதா? சரத்குமார் ஆவேசம்.!

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பது ஏற்க கூடியதல்ல ; அத்தகைய செயல் சட்ட விரோதம். பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என சபரிமலை கோவிலுக்குள்ளாக பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பினை பெண்கள் அமைப்புகள் உள்ளிட்டவை மகிழ்ச்சியாக வரவேற்றுள்ள சூழலில், பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென கருத்துக்கள் தெரிவித்துவருகின்றனர் சிலர்.
இந்த நிலையில், சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல ; மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்குள் தலையிடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு என மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்.
மேலும், இந்த முடிவினால் சாதி ; மத கலவரங்கள் வரும் எனவும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.

ad

ad