புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 அக்., 2018

இவ்வாண்டும் வெல்லுவாரா கடந்தாண்டு வெற்றியாளர் ரொனால்டோ?


பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான 30 பேர் கொண்ட
பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டு இவ்விருதை வென்ற போர்த்துக்கல், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்விருதை வெல்லுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், இவ்வாண்டுக்கான ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களினது கூட்டமைப்பின், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தின் சிறந்த வீரராக குரோஷியாவினதும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டினதும் மத்தியகள வீரரான லூகா மோட்ரிட்சே வென்றிருந்த நிலையிலேயே மேற்குறித்த கேள்வி எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், 2008ஆம் ஆண்டு முதல் இவ்விருதை வென்று வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது ஆர்ஜென்டீனாவினதும் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்கள வீரருமான லியனல் மெஸ்ஸியே இவ்வாண்டும் விருதை வெல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க விடயமாக, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்கான இறுதி மூன்று பேர் கொண்ட குறும்பட்டியலிலேயே லியனல் மெஸ்ஸி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு பலூன் டோர் விருதுக்கான 30 பேர் கொண்ட பட்டியல் பின்வருமாறு:
சேர்ஜியோ அகுரோ, அலிஸன், கரெத் பேல், கரிம் பென்ஸூமா, கெவின் டி ப்ரூனே, எடின்சன் கவானி, திபோ கோர்துவா, றொபேர்டோ பெர்மினோ, டியகோ கொடின், அன்டோனி கிறீஸ்மன், ஈடின் ஹஸார்ட், இஸ்கோ, ஹரி கேன், என்கலோ கன்டே, ஹியூகோ லோரிஸ், மரியோ மண்டூஸிக், சாடியோ மனே, மார்ஷெலோ, கிலியான் மப்பே, லியனல் மெஸ்ஸி, லூகா மோட்ரிட்ச், நெய்மர், ஜான் ஓப்ளக், போல் பொக்பா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவான் றகிட்டிச், சேர்ஜியோ றாமோஸ், மொஹமட் சாலா, லூயிஸ் சுவாரஸ், ரபேல் வரான்.