புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில்
அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில் முகநூலை தடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.




சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ad

ad