புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்தி விடுவோம் என்று இராணுவத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பொலிஸாரால் ஒரு செயற்பாட்டை மேற்கொள்ள முடியாதுபோன காரணத்தினால்தான் இராணுவம் களமிறங்கும். இலங்கையில், அவ்வாறான செயற்பாடுகள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.

அப்படியாயின், பொலிஸார் தொடர்ச்சியாக மந்த கதியாகவே செயற்பட்டு வருகிறார்கள் என்றா கூறமுடியும்?

நிலைமையைக் கட்டுப்படுத்தவே இராணுவம் களமிறக்கப்படும். எனினும், இதுவரை அவ்வாறான அவசர நிலைமையொன்று நாட்டில் ஏற்படவில்லை.

இராணுவத்தை களமிறக்கி ரத்துபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை நாம் மறக்கவில்லை. நாம், மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை.

வடக்கில், கடந்த காலங்களிலும் புலிகளின் ஆடைகள், ஆயுதங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. ஜே.வி.பியின் கிளர்ச்சிக்குப் பின்னரும், பல வருடங்களாக ஆயுதங்கள் எல்லாம் மீட்கப்பட்டன.

இவற்றையெல்லாம் இன்று சிலர் மறந்து விட்டார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இவை இடம்பெற்றன.

யுத்தத்துக்கும், சாதாரண சட்டத்துக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இராணுவம் தான் வேண்டுமென்றால் பொலிஸாரே தேவையில்லை.

நாம், கடந்த அரசாங்கம் போல ஆட்சியை நடத்த முற்படவில்லை. இதற்கு மக்களும் எமக்கு ஆணை வழங்கவில்லை.” என கூறினார்.

ad

ad