புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2018

கல்முனை பிரதேச செயலக ஆலய விவகாரம் !அடைக்கலநாதன் – ஹக்கீம் இடையில் விசேட பேச்சு

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய விவகாரம் !செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் ஹக்கீம்
மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபட்டுவரும் ஆலயத்தை அகற்றுவதற்காக கல்முனை நீதி மன்றத்தில் கடந்த (16) வழக்கு ஒன்றை கல்முனை மாநகரசபை மேயர் தாக்கல் செய்துள்ளார், இது இப்பிரதேச தமிழ் மக்களிடம் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட்ட சட்டவிரோதமான கட்டிடம் என குறிப்பிட்டே இந்த சிறு ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய கெளரவ. செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோருடன் கலந்துரையாடி இவ் ஆலய பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு அமைச்சர் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ் இவ் பிரச்சினையை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சமய ஸ்தலங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் சமய ஸ்தலங்கள் ஊடாகவே அதிகளவான இனமுறுகல் உருவாகிய வரலாறுகள் உள்ளதாகவும் எனவே இவ் ஆலய பிரச்சினையை உரிய தலைவர்கள் இப்பிரச்சினையை தீர்த்துவைக்கவேண்டும் இல்லாவிட்டால் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பாரிய இனப்பிரச்சினை ஏற்படுத்தும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எமது தமிழ் சி என் என்  ஊடக நிறுவனத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இதனை
தெரிவித்தா

ad

ad