புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2018

அனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கமோ? வடக்கு முதல்வருக்கு சந்தேகம்!

அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம்
ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அத்தோடு 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு, தனக்கு தகுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் வௌியான செய்திக்கு பதில் வழங்கும் வகையில், முதலமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வடமாகாணசபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்களினூடாக 40,000 அமெரிக்க டொலருக்கு குறைவான வாகனமொன்றை தீர்வை நீக்கி இறக்குமதி செய்து பயன்படுத்த முடியும்.
முதலமைச்சர் என்ற வகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கு இந்த அனுமதிப்பத்திரம் தரப்பட்டிருந்தது.
அதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப்பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், முதலமைச்சர் என்ற வகையில் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு, தனக்கு தகுதியுள்ளது.
இதன்காரணமாக, முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்து, தனது பதவிக்கு உரித்தான தீர்வை வரி நீக்கிய அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனினும், இந்தக் கோரிக்கை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அது அமைச்சர் மங்கள சமரவீரவினால் நிராகரிக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன்.
இது தனக்கான சட்டப்படி உரித்து என்பதை வலியுறுத்தி, அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கூறி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும்” சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பான விமர்சனங்கள் குறித்து ஆராயுமிடத்து, அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad