புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2018

ஜெயக்குமார்’ புகழ் சிந்துவின் வாட்ஸ்அப் வரி!

பி.பி.ஏ படித்திருக்கும் சிந்துவுக்கு இப்போது வயது 33. 1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்தவர் சிந்து.  சகோதரர்,
அம்மாவுடன் ஏழுகிணறு ஏரியாவில் வசித்து வந்தார். அப்பா குடும்பத்துடன் தொடர்பில் இல்லையாம். வெளிநாட்டில் இருக்கிறாராம்.
சிந்து
இதனால், சிந்துவுக்கு திருமணம் செய்து வைக்க அம்மா முடிவு செய்து மாப்பிள்ளைகளைப் பார்த்து வந்தார். திருமண தரகர்கள் சிலரிடமும் சொல்லி வைத்தார். மேட்ரிமோனியல் போன்ற வரன் தேடும் ஏஜென்சிகளிடமும் பதிவு செய்தாராம். ஆனால், மாப்பிள்ளை கிடைக்காமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. `` 'முதிர் கன்னி' எனச் சிலர் அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால்தான் என்னவோ தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் Life Is Short என்கிற வாக்கியத்தை அவர் வைத்திருந்தார்!'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  ``சிந்துவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற முயற்சியில்தான் சிந்துவுக்கு இந்த நிலை ஏற்பட்டது. திருமணம் தள்ளிப்போவது தொடர்பாக ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டபோது பணத்தை வாங்கிக்கொண்டு அந்த ஜோதிடர் ஏமாற்றியதால் அதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஜெயக்குமாரிடம் சென்று பிரச்னை ஆகிவிட்டது'' என்றார்கள்.

ad

ad