-

22 அக்., 2018

டொல்பினை பிடித்த மீனவர் கைது

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை,
சிலாபம் பொலிஸார் இன்று (22)கைது செய்துள்ளனர்.
சிலாபம்-ரத்னஉயன பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மீனவரிடமிருந்து, வெட்டப்பட்ட நிலையில் 24 கிலோ கிராம் நிறையுடைய டொல்பின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை, சிலாபம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ad

ad