புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2018

தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டினை த.தே.கூ. முன்கொண்டு செல்லவேண்டும் : ஜேதிலிங்கம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புவிசார் அரசியல் நிலைமைகளையும் தென்னிலங்கையின் பெருந்தேசிய
வாத நிலைமைகளையும் கருத்தில் எடுத்து தமிழ்த்தேசிய வாத நிலைப்பாட்டினை முன்கொண்டு செல்லவேண்டும். அத்துடன் எடுபிடி வேலைகளைக் கைவிட்டு செயற்படவேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜேதிலிங்கம் தெரிவித்தார். சர்வதேச நாடுகள் பெரும் தேசிய வாதத்துடன் அதிகம் முரண்படாத வகையிலான அணுகு முறையிலையே செயற்பட்டு வருகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சியிலுள்ள மிகப் பிரதான இரு பெரும் கட்சிகளும் குறிப்பாக  ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் பெருந்தேசிய வாதத்தின் தாராண்மை வாத முகத்தைக் கொண்டது. 
மற்றைய கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி  பெருந்தேசிய வாதம் என்பது இனவாதத்தைக் கொண்டது. 
சர்வதேச நாடுகள் தாராண்மை முகத்துடன் தான் பயணிக்கின்றது. தாராண்மை வாதம் என்பது ஒரு எழுச்சியைக் கொண்டது. அனைத்துத் தரப்பினரையும் அணைத்துக் கொண்டு செல்லும் செயற்பாட்டைக் கொண்டது. 
அவ்வாறு செல்கின்றபோது ஒரு சுமூகபோக்கைக் கொண்டு செல்லலாம் என்பதே அவர்களின் போக்காக கொண்டது. 
ஐக்கியதேசியக் கட்சி தாராண்மை வாதத்தைக் காட்டினாலும் கூட பெரும் தேசிய வாத்திலிருந்து விலத்தி செயற்படுவதற்கு தயாராக இல்லை. இதன் வெளிப்பாடுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக் கொள்கையை மீறாத வகையிலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற நிலைமையும் சிங்கள மொழியின் மேலான்மை இவற்றை விடுவதற்கு இவர்கள் தயாராக இல்லை. 
ஆனால் தமிழ்தேசியத்துடன் நிற்பவர்கள் தேசியத்தை கைவிட்டவர்களாகவே செயற்படுகின்றார்கள். அதாவது எடுபிடி செயற்பாடே செய்கிறார்கள். 
தமிழ்த்தேசிய வாதத்தின் கொள்கைகளை கைவிடாத வகையிலேயே செயற்படவேண்டும். ஆனால் தமிழ்த்தேசிய வாதத்தின் அடிப்படைக் கொள்கைகளையே விட்டுச் செல்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளது. 
தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை என்பது பெருந்தேசிய வாத்தின் மீள் எழுச்சி மற்றும் புவிசார் அரசில்.  இவை இரண்டுமே இன்று குழப்ப நிலைக்குக் காரணமாகவுள்ளது. 
குறிப்பாக தாராண்மைவாதத்தின் செயற்பாடானது அனைத்துத் தரப்பையும் இணைத்து செல்வது பெருந்தேசியவாதத்தில் சிதைவை ஏற்படுத்தும். 
பெருந்தேசியவாதம் என்பது தன்னுடைய தேசிய தன்னுடைய பெருளாதாரம் என்ற கொள்கைகளைக் கொண்டது. இது சிதைவடைந்ததன் காரணமாக குழப்பநிலை ஏற்பட்டது. 
பெருந்தேசிய வாதம் கட்டியொழுப்பப்பட்டது இந்திய எதிர்ப்பு மேற்குலக எதிர்ப்பு தமிழின எழுச்சி இந்த மூன்று தூண்களினால் தான்  கட்டியொழுப்பப்பட்டது மேற்குலகமும் இந்தியாவும் இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பில் பங்களிப்பு செய்ததை பெருந்தேசியவாதம் ஏற்றுக்கொள்ளவில்லை.
புவிசார் அரசியல் சீனாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் உள்ள போட்டியின் உச்சமாகும். இதன் வெளிப்பாடு தான் சீனா அரசியல் குழப்ப நிலையின் போது ஆதரவு சார்பான கருத்துக்களை வெளியிட்டது. 
ஏனைய நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகித்தது. இந்தப் பிரச்சினையின் போது இந்தியாவிற்கு இரு வேறு பிரச்சினைகள் உள்ளது. 
குறிப்பாக தேசிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்  மற்றையது தேசியப் பாதுகாப்பு இதன் காரணமாகத்தான் இந்தியா மௌனமாக இருக்கிறது.
 தாம் இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பதாகத் கருத்துக்களை  வெ ளியிடுகின்றது. 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது குறித்த விடையங்களை அலசி ஆராய்ந்து தமிழ்த்தேசிய வாதத்தை எவ்வாறு கொண்டு செல்கின்றது என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

ad

ad