புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2018

விசுவமடுவில் முன்னாள் போராளி திடீர் மரணம்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும்
29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.
புன்னை நீராவியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரான முன்னாள்போராளி  மரிய ஜெபசேன் விஜிதன் மூன்று ஆண்டுகள் புனர்வாழ்வு பெற்று நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு  அவரது வீட்டில் இருந்தவேளையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவரின் உடல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரோத பரிசோதனை இடம்பெற்றபோதும் இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரது மரபணுக்கள் ஆய்விற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை தர்மபுரம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad