புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு
வழங்குவதாக, நாடாளுமன்றத்தின் 122 எம்.பிக்களும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுயாதீனமானக் குழுவாக இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்றும அவர் கூறினார். 

இதேவேளை அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள, வசந்த சேனாநாயக்க அறிவித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதுடன், வடிவேல் சுரேஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அமைச்சராக புதிய அமைச்சரவையில் பதியேற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தமது அமைச்சுப் பதவியிலிலிருந்து விலகுவதாகவும், இதுதொடர்பில் , இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ad

ad