புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2018

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு-

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன.ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு என்று தெரியவில்லை.
ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. கறுப்பு ஊடகங்கள் குறித்து சபையில் விவாதம் நடத்த வேண்டும்.

ஊடகங்களை நாம் இல்லாமல் செய்ய முயலவில்லை. ஆனால் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்த வேண்டும்.நாங்கள் தான் ஊடக சுதந்திரத்திற்காக போராடினோம் எனினும் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்துவதற்கு ஜனவரி மாதம் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள விலை எவ்வாறு குறைவடையும் என்பதற்கான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 96 பெற்ரோல் 10 ரூபாவினாலும், ஒக்டேன் டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ad

ad