புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2018

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும், இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உற்சாகத்தை வழங்கி வருகின்றதே ஒழிய, அவர்களுக்கு இதுவரையும் தண்டைனையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மேலும் நேர்மையான அரசாங்கமென்றால் குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டிருக்க வேண்டும்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் ஆயுதங்களை ஒருசிலர் கொண்டு செல்கின்றனர் மற்றும் தகாத முறையில் தொடர்ச்சியாக சிலர் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பி அதற்காக போராடினால் உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.இருப்பினும் இத்தகைய செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.

மேலும் எந்ததொரு நாட்டிலும் இல்லாத கீழ்தரமான அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் மாறியுள்ளது” என ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ad

ad