புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2018

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி; நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்தது.

சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் 13ஆம் திகதிகளில் விசாரணை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

ad

ad