புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2018

வணக்கம் என் சொந்த மண்ணுக்கு  சென்றிருந்த போது சிறுப்பிட்டி பிரதான  வீதிக்கு தனியார் பேரூந்து சங்கம் மின்விளக்குகளை பொருத்தி கொடுத் திருந்தது . அதனை பார்த்த நான் மடத்துவெளி பிரதான வீதியில் நோடடம் இட்டேன் .மாடுகள் களவு . கோவில் விழாக்களில் இருந்து வீடு திரும்பும் பெண்களின்பாதுகாப்பு  மற்றும்  தங்க நகை களவு போன்ற சமூக  விரோத  நடவடிக்கைகளுக்கு  மின்விளக்கு பொருத்தினால் சற்று குறைய வாய்ப்புண்டு ,ஆதலால் அந்த பிரதான வீதியில்  மின்னிணைப்புக்காக  முன்னரே  உள்ள கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்துதல் இலகுவானது என  அறிந்தேன் .திருஅ  -சண்முகநாதன் அவர்கள்  சுவிஸ் வந்த பொது நடந்த கமலாம்பிகை பழைய மாணவர் சங்க கூடத்திலும் இந்த கோரிக்கை அலசப்பட்ட்து .மடத்துவெளி பிரதான வீதியில் ஊரதீவுக்கு   செல்லும் வீதி சந்தியில் (மலர் கடையடி  ) இருந்து பின்கடி  பகுதி வரை கம்பங்கள்  இருக்கின்றன .  ஆனால் மடத்துதுறையில் இருந்து  மலர் கடையடி வரை  வீதி கரையில் கம்பங்கள் இல்லை  . மடத்துதுறை பிள்ளையார்  கோவிலில்  வீதி பக்கம் மின்விளக்கு  உண்டு .ஆகவே  அந்த சிறிய அளவு  வீதிக்கு  முடியாத நிலை. பாஸ்கரன்  அவர்கள் மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு முன்பாக   மடத்துவெளி கிழக்கு கடற்கரைக்கு செல்லும் புதிதாக  தார் வீதியாக  மாற்றப்பட கம்பிலியன்  வீதிக்கு சொந்த செலவில் மின்விளக்குகளை  பொருத்தி கொடுத்தார் .ஆதலால்  பாஸ்கரனை   தொடர்பு கொண்டு  பிரதான வீதிக்கும்  போடுவோம் உடனடியாக  நான் காசு தருகிறேன் .என்றேன்  உடனடியாக நவம்பர் 6 ஆம் திகதி காசு மூன்று லட்ஷம் அனுப்பி இருந்தோம் . பாஸ்கரன் ஏற்கனவே செயதது போலவே  சர்வோதயம் யமுனாவின் ஒருங்கிணைப்பில்  திரு  இளங்கோவின் உதவியோடு  செய்து கொண்டிருக்கிறோம் ..சுமார் நாட்பது நாட்களுக்கு முன்னரே  புன்கடியில் இருந்து ஆரம்பித்தோம் . காஜா புயல்  நிமித்தம் தடங்கல் ஏற்பட்டது .பின்னர் மீண்டும் பணி  நடைபெறுகிறது எனது பணிக்கு  மடத்துவெளி வீதியில் தொடர்புடைய  சிலநண்பர்களும் பண உதவி கேட்டிட பொது தந்துனார்கள் .ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் 11  மின்கும்பில் வழங்கப்பட்ட்து  எமது பிரதேச சபை உறுப்பினர்  திருமதி யசோ அவர்கள் ஊரதீவு வீதிக்கு  அவற்றை பொருத்தி உள்ளார்  இன்னும் ஒரு பிரதேச சபை  உறுப்பினர்  செந்தூரன் அவர்கள்   மலர் கடையடியில் இருந்து  கிழக்கே  தூண்டி வைரவர்  கோவில்.மற்றும்  முன்னர்  திரு  அம்பலவாணர்  அவர்களின் கடை இருந்த  இடத்துக்கு   செல் கின்ற  செம்மண் வீதிக்கு  தனது  மின்குமிழ்களை பொருத்தி உள்ளார் என அறிகிறேன் . திருமதி யசோ அவர்களும் ஊரதீவு சனசமூக நிலையமும்  கேட்டுக்கொண்டபடி  இன்னும் ஒரு லட்ஷம் ரூபாவினை சனசமூக நிலைய செயலாளர்  செல்வி எஸ் எக்சனா அவர்களுக்கு பத்து நாட்களுக்கு  முன்னே  அனுப்பி உள்ளேன்  இது  ஊரதீவு  வீதியில்  இன்னும் பாத்து மின்குமிழ்களையம்  ஊர்தேவியில் உள்ள இன்னுமொரு  சிறுவீதிக்கு 15 மின்குமிழ்களையும் பொருத்தவென  அனுப்பி உள்ளேன்    நன்றி 

ad

ad