புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2018

ஹெலியில் ரணில்:முன்னாலே கூட்டமைப்பு?


வடக்கில் ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் பயணித்துள்ளனர்.
வடக்குக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன், அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறையாகும்.
அவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே விஜயம் செய்வாரென அறியமுடிகின்றது.

இதனிடையே ரணிலை வரவேற்க விசயகலா மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான மூலம் விரைந்துள்ளனர்.

ad

ad