புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2019

மாவை தீவிர முயற்சியால் சு1100 கோடி ரூபாய் செலவில்அராலித்துறை ( வழுக்கையாறு ) - குறிகாட்டுவான் இறங்குதுறை ( புங்குடுதீவு ) AB39 வீதிபுனரமைக்கப்படவுள்ளது

ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே புனரமைக்கப்படாது காணப்படுகின்ற அராலித்துறை ( வழுக்கையாறு ) - குறிகாட்டுவான் இறங்குதுறை ( புங்குடுதீவு ) AB39 வீதியானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொடர் முயற்சிகளின் காரணமாக 1100 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் mp மாவை சேனாதிராசாவின் தீவிர முயற்சியால் சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் நிதிப்பற்றாக்குறை காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை . இந்நிலையில் நேற்று பிரதமர் ரணிலை சந்தித்திருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp அவர்கள் விரைவாக குறிகாட்டுவான் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென்று அழுத்தத்தை பிரயோகித்திருந்தார் .

எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சு செயலாளர் சிவஞானசோதி தெரிவிக்கின்றார்.

கடந்த பல தசாப்தங்களாக வேலணை - புங்குடுதீவு இணைப்பு பாலமாகிய வாணர் தாம்போதியே இலங்கையின் நீண்ட கடற்பாதையாக ( 4 km ) காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது . ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இவ் வீதியின் ஊடாகவே நயினாதீவு , நெடுந்தீவுக்கு சென்று வருகின்றனர் . ஆனாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற இப்பாலத்தோடு கூடிய வீதியின் நிலை குறித்து இருபது வருடங்களாக அதி சக்திவாய்ந்த அமைச்சராக விளங்கிய Epdp டக்ளஸ் தேவானந்தவோ அல்லது ஏனைய சிங்கள கட்சிகளூடாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களோ எவ்வித அக்கறையினையும் செலுத்தியிருக்கவில்லை . ஆனாலும் எமது வேண்டுகோளுக்கிணங்க மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வீதியின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்குமாறு தொடர்ச்சியாக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினரை கோரிவந்தமை குறிப்பிடத்தக்கது .

அராலியை தீவகத்தோடு இணைப்பதற்கான பாலமொன்றும் இதனுள் உள்ளடங்குகின்றது . இதனால் வலிகாமம் - தீவகம் மக்களிடையிலான போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்படவுள்ளது . பல்வேறு வியாபாரத் தொடர்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது .

அத்தோடு மண்டைதீவு - அல்லைப்பிட்டி இணைப்பு வீதியை விரைவில் புனரமைக்கும் பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது info-.thanks kunalan k

ad

ad